புகழ்மாலை ஏந்தி பலர் பொதுவாழ்வில்
வருவார்
நஞ்சுமாலை ஏந்தி இனி யாரு
வருவார்?
சிலகால வாழ்வில் ஏனிந்த
சினிமாத்தனம்
தமிழா ஏன் இன்னும் உனக்கு
இந்த ஈனத்தனம்
வரலாறு ஒருகாலும் நிலை
தடுமாறாது
வருவதை நீ தடுக்காமல் நின்றால்
சரியாகாது
எதிர்த்தாளும் வல்லமை சிறு
புழுவுக்குமுண்டு
எதிரியை கொல்லாமல் வெல்ல
வழிபலவுண்டு
~~
இவர் படும் கஸ்ரம் அவரறியார்
அவர் படும் கஸ்ரம் இவரறியார்
யார் படும் கஸ்ரம் யார்
துடைப்பார்
ஈழத்தாயின் வீட்டில் யார்
துயரடைப்பார்?
தேவன் எதற்கு?
தேடுதல் எதற்கு?
தேவை உனக்கு
முதலில் மனிதநேயம்
சாவை ஏற்ற சந்ததிக்காய்
சேவை கொஞ்சம் செய்யுங்கடா
ஆண்டவன் இல்லா ஆலயங்கள்
அடுக்கி வருகின்றாய் அடுக்கடுக்காய்
ஆளுமையுள்ள தமிழ்க் குடியே
ஆமை வேகத்திலாவது நகருங்கடா?
நெஞ்சில் பட்ட விழுப் புண்ணை
நெஞ்சம் உள்ளவரை மறவாதே!
நேர்மை நீதி நியாயம் எல்லாம்
உரத்து கேட்டால் மட்டுமே
கிடைக்குமடா
நன்றி,
அ.பகீரதன்