A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, May 18, 2014

நினைவும் நெருப்பும்


புகழ்மாலை ஏந்தி பலர் பொதுவாழ்வில் வருவார்

நஞ்சுமாலை ஏந்தி இனி யாரு வருவார்?

சிலகால வாழ்வில் ஏனிந்த சினிமாத்தனம்

தமிழா ஏன் இன்னும் உனக்கு இந்த ஈனத்தனம்

 

வரலாறு ஒருகாலும் நிலை தடுமாறாது

வருவதை நீ தடுக்காமல் நின்றால் சரியாகாது

எதிர்த்தாளும் வல்லமை சிறு புழுவுக்குமுண்டு

எதிரியை கொல்லாமல் வெல்ல வழிபலவுண்டு

~~

இவர் படும் கஸ்ரம் அவரறியார்

அவர் படும் கஸ்ரம் இவரறியார்

யார் படும் கஸ்ரம் யார் துடைப்பார்

ஈழத்தாயின் வீட்டில் யார் துயரடைப்பார்?

 

தேவன் எதற்கு?  தேடுதல் எதற்கு?

தேவை  உனக்கு முதலில்  மனிதநேயம்

சாவை ஏற்ற சந்ததிக்காய்

சேவை கொஞ்சம் செய்யுங்கடா

 

ஆண்டவன் இல்லா ஆலயங்கள்

அடுக்கி வருகின்றாய் அடுக்கடுக்காய்

ஆளுமையுள்ள தமிழ்க் குடியே

ஆமை வேகத்திலாவது நகருங்கடா?

 

நெஞ்சில் பட்ட விழுப் புண்ணை

நெஞ்சம் உள்ளவரை மறவாதே!

நேர்மை நீதி நியாயம் எல்லாம்

உரத்து கேட்டால் மட்டுமே கிடைக்குமடா

 

நன்றி,

அ.பகீரதன்