எழுதாத பொருளொன்றை
எழுதுகிறேன் மனம்நொந்து
வழுவாதே நீதிதம்பி
வள்ளுவனுக்கு நீதம்பி
கூடிக் கூழ்குடித்து
கூட்டாக வாழ்வுசெஞ்சு
குழுமமாய் வாள்பிடித்து
குதூகலமாய் வாழ்ந்தஇனம்
யாதும்ஊரே யாவரும்கேளீர்
தீதும்நன்றும் பிறர்தரவாரா
சொன்னவையோ பலகோடி
வென்றவையோ ஒருகோடி
சிற்றறிவாய் சிந்தித்து
சீக்கிரமே நிலைதளர்ந்து
சிறுபிள்ளையாய் அடம்பிடித்து
குழுக்குழுவாய் சீஇது என்னவேலை?
இனாமாய் புகழடைய-என்
இனமா உனக்குவேணும்
கனவாய் எல்லாமாச்சுதடா
இரக்கம்கொஞ்சம் காட்டுங்கடா
பதவிக்காய் பத்துப்பேர்
தொழிலிற்காய் பாதிப்பேர்
புகழிற்காய் மீதிப்பேர்
தமிழிற்காய் யாருங்கடா
அறிவாலே உயருங்கடா
செறிவாக உழையுங்கடா
நேர்மையுள்ள தொண்டனுக்கு
நேரம்வரும் தடைதாண்டுதற்கு
புழுப்புழுவாய் நெளியுதங்கே உன்னினம்
புரியாமல் குழுக்குழுவாய் பிரிந்தென்ன
பலன்
ஆசையாலே அழுக்கழுக்காய் உக்குதடா
உன்மனம்
அறியாமையாலே அடிமைகள்
குழுக்குழுவானால் என்னபலம்
மாட்டீன்லூதரின் கடின உழைப்பு
மாற்றமானது ஒபாமாஎனும் கறுப்பு
விதையுங்கடா சேர்ந்து இன்று
விளையும் ஒருநாள் பெருநெல்லு
நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்