(பிரபல
கவிஞர் மு.மேத்தாவின் கவிதை இது)
இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவும்
இல்லாத-
கருத்துக்கள் தம்மைத்
தாமே ஆளக்
கற்றுக் கொண்ட
புதிய
மக்களாட்சி முறையே
புதுக்கவிதை!
No comments:
Post a Comment