சிங்கத்திற்கு வாழ்க்கைப்பட
புலிக்கு என்ன தலையெழுத்து?
புலிக்கு
பலதடவை
குறிவைத்தார்கள்
தப்பிக்கொண்டது
இந்தத்
தடவை பொறிவைத்ததால்
சிக்கிக்
கொண்டதோ?
புலி வாலாட்டுவதில்லை
இப்போது
புலி இல்லை அதனால்
தெருநாய்களும் வாலாட்டுகின்றன
சொறிநாய்கள்
கால்மேல் கால்போட்டு காலாட்டுகின்றன
எலி மருந்துக்கெல்லாம்
புலி சிக்குவதில்லை
புலிக்குத்
தெரியும் அதன் இலக்கு
அன்று
சிலருக்கு
புலியை பிடிக்கவில்லை-ஏனென்றால்
புலியின்
மீது ஏறி சவாரி செய்ய முடியாது என்பதால்
இன்றும்
சிலருக்கு
புலியை பிடிக்கவில்லை
புலி இனி
சரிவராது என்பதாலோ
மேனகையை
அனுப்பியும்
புலியை
வீழ்த்தமுடியவில்லை
மேதகுகள்
சேர்ந்து வஞ்சகம் தீர்த்துவிட்டார்கள்
வேடன்
மாறுவேடத்தில் வருவான் என்று
புலிக்குத்
தெரியும்
வேடன்
நவீன துப்பாக்கியோடு
வருவானென்று
அதுக்கு
எப்படித் தெரியும்
புத்தி
மான்கள் குதூகலமாய்
அரியாசனம்
ஏறுகின்றன
சிங்கத்திற்கு
இரையாகப் போவது தெரியாமல்
வடகாட்டில்
குரங்குகள் பட்டாசு கொளுத்துகின்றன
சிம்மாசனம்
கிடைத்துவிட்டதாம்
புலியை
பிடித்தவர்களுக்கு- இப்போதும்
புலியைப்
பிடிக்கிறது
புலிக்கு
வால்பிடித்தவர்களிற்கு மட்டும்
இப்போ
கிலி பிடித்திருக்கிறது
நன்றி,
அ.பகீரதன்