கனிமொழியில் என்றுமே நல்ல கருணை
தன்மொழியில் எப்போதும் இல்லை சுரணை
தனிநாடு மீட்பாராம் சினிமா வர்ணனை
களத்திலே கைவிட்டாரே நம் கர்ணனை
கவிமொழி என்றுமே கைவைந்த கலை
காலத்தை வென்றுமே நிற்கின்ற சிலை
நாசூக்காய் பேசுவதில் அவர்தான் தலை
காசுக்காய் நக்கினாரோ எச்சில் இலை
தமிழ் அண்ணாவின்
புகழ்காத்த தம்பி
ஈழத்து அண்ணாவை
விழவிட்ட தும்பி
அகிலத்து தமிழர்கள்
இருந்தாரே நம்பி
ஆனாலும் அப்பப்போ
நீட்டுவாரே கம்பி
திருக்குவளை பெற்றெடுத்த
தமிழ்ப் புலமை
திருநீற்றுக்குப்
பணியாத திராவிடத் தலைமை
திருப்பணியாலா உனக்குள்
என்றுமே இளமை
தீராதபகையானாய்
உனக்கேன் இந்த நிலமை
நெஞ்சினில்
கொஞ்சமும் இல்லை நீதி
பிறகேன்
எழுதினீர் நெஞ்சுக்கு நீதி
நேர்மை தவறிய
வஞ்சகச் சாதிநீ
பிறகேன்
எழுதினீர் வள்ளுவப் பிரதி
மும்முறை முதலிரவு
ஏறிய வீரா
ஐம்முறை முதல்வர்
ஆன சூரா
தமிழ்மறை தாங்கிய
தஞ்சை தேரா
தமிழ்மனம்
பொங்குதே உனக்கு எதிரா
வறுமையில்
அறிந்தீரே பணத்தின் அருமை
அதற்காக அள்ளிக்
குவித்தென்ன பெருமை
அறத்திற்கு
சொன்னீரே ஆயிரம் உவமை
அனைத்துமே உன் அவைக்கு
எருமை
வசைபாட மனசின்றி
தவிக்குதுஎன் தமிழ்ப்பேனா
வழிபோட மறந்தாயே
உன்முகத்தில் உமிழ்ப்பேனா
உன்பெயரை
என்பிள்ளைக்கு பெயராய் வைப்பேனா
உனக்காக இனியும் நான்
தீக்குளிப்பேனா
உங்கள்
நேரத்திற்கு நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்